டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபாவின் (Divine Fine Arts Sabha) பட்டமளிப்பு விழா
மாணவர்களின் தனித் திறமைகளை 8 தர வரிசைகளாக பிரித்து சிறந்த ஆசிரியர்கள் மூலம் பாடங்களை கற்று கொடுத்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தேர்வுகள் நடத்தி இறுதி ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் அவர்களின் திருகரங்களால் பட்டமளிப்பு வழங்கினார்கள். முனைவர் எம் வி சுரேஷ்குமார் பேராசிரியர் மற்றும் இயக்குனர் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி கோவை இவ் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறபித்தார். குரு சாய்ஸ்ரீ அவர்களின் ஸ்ரீ சாய் நாட்டிய பள்ளி மாணவிகள், குரு. Dr. ராஜலக்ஷ்மி அவர்களின் ஸ்ரீ லட்சுமி நாட்டியாலையா, மாணவிகள், குரு. அபிதா குஞ்ஞலம்பாள் மாணவிகள், குரு. மீரா,மஹாதேவ் நிர்த்தியாளா, மாணவிகள் கலந்து கொண்டு பட்டம் பெற்றனர்.
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான ஆவுடையார் கோவில் என வழங்கப்பெறும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் சிவராத்திரியை முன்னிட்டு 10 மார்ச் 2024 அன்று மாலை 4 மணிக்கு டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா வழங்கும் “சிவபுராண பெருவிழா” நடைபெற்றது.
இன் நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும், இசை கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
சிவபுராணம் பெருவிழா
சிவபுராணம் பெருவிழாவின் ஆரம்பமாக முதலில் அனைத்து நடன ஆசிரியர்கள் நடன கலைஞர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒருமுறை சிவபுராண பாடலை இசை கலைஞர்கள் என அனைவரும் சேர்ந்து பாடினார்கள். பின் அதே பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். நிகழ்வின் இறுதியில் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபாவின் (Divine Fine Arts Sabha) மார்கழி உற்சவம் திருவிழா
டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபாவின் (Divine Fine Arts Sabha) மார்கழி உற்சவம் திருப்பெருந்துறை என்று அழைக்க படும் ஆவுடையார் கோவிலில் மிக விமர்சையாக 10 நாட்கள் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் 50நடன பள்ளிகளில் இருந்து கலந்துக் கொண்டனர்.
நிகழும் சோபகிருது வருடம் ஆவணி மாதம் 25ம் நாள் 11.09.2023. திங்கள் கிழமை ஈசன மடம் திருநெல்வேலி மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு நடை பெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் திருவாடுதுறை ஆதீனம் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தம் திருக்கரங்களால் டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா ஆசிரியர்களுக்கு அவர்தம் நடன பணியை பாராட்டி நாட்டிய மயூரி என்னும் விருது வழங்கியருளியது. அதே போல் நடனம் ஆடிய கலைஞர்களுக்கு நாட்டிய மணி என்ற விருது வழங்கி ஆசீர்வாதமும் தன் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.
நிகழும் சோபகிருது வருடம் ஆவணி மாதம் 17 ம் நாள் 03.09.2023. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அபயப் பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மயிர நாத சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு திருவாடுதுறை ஆதீனம் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருக்கரங்களால் டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா ஆசிரியர்களுக்கு அவர்தம் நடன பணியை பாராட்டி நாட்டிய மயூரி என்னும் விருது வழங்கியருளியது. அதே போல் நடனம் ஆடிய கலைஞர்களுக்கு நாட்டிய மணி என்ற விருது வழங்கி ஆசீர்வாதமும் தன் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்
ஆடி பெருக்கு முன்னிட்டு டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபாவும், அவிநாசி ஸ்ரீ சாய் பாபா கோவிலும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
தருமை ஆதீனம் 27 வது குருமணிகளின் சமுதாயத் தொண்டும், சமயத் தொண்டும், சிறப்பாக செய்து வருவதையும். அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனை செய்து வருவதையும் . அவருடைய சாதனைகளை பாராட்டும் வகையில் Divine World Book of Records நிறுவனம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .
குருமணிகள் செய்த சாதனைகள் :
- கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 க்கும் மேற்பட்ட கோவில்கள் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தமை.
- சீர்காழி சம்பந்தர் பதிகம் 5000 நடன கலைஞர்களைக் கொண்டு நாட்டிய திருவிழா செய்தமைக்கு.
- பல்வேறு நாடுகளில் சைவமும் தமிழும் மேன்மையுட பயணித்து தொண்டாற்றியமைக்கு
- அகழ்வில் அமுதத் தமிழ் தேவாரச் செப்பேடு மீட்டெடுத்த புண்ணியர் என்று குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு விருதை வழங்கி குருமகா சந்நிதானத்தின் ஆசியையும் divine world book of records பெற்றது.
Sirkali Nattiya Thiruvizha -5000. 23 மே 2023 செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தானத்தில் 5000 நடன கலைஞர் ஆடுவதாக கூறி 7000 நபர்கள் சிறப்பாக நடனம் ஆடி டிவைன் உலக சாதனை புத்தகத்தில் இன் நிகழ்ச்சி இடம் பெற்றது. இன் நிகழ்ச்சியின் சான்றிதழ் ஸ்ரீலஸ்ரீ யிடம், தமிழக ஆளுநர் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து நடனமங்கை என்ற பட்டத்தை திருப்பூரை சேர்ந்த சாய்ஸ்ரீ அவர்கள் பெற்றுக் கொண்டார்
திருமலா திருப்பதி தேவஸ்தானம் – கன்னியாகுமரி 2020
திருவாரூர் சிவபுராணம் நாட்டிய 2019 வைபவம்
திருவாரூர் சிவபுராணம் நாட்டிய 2019 வைபவம்
திருப்பவை நாட்டிய வைபவம் 2018. மன்னார்குடி. திருவாரூர் மாவட்டம்
திருப்பவை நாட்டிய வைபவம் 2018.
திருப்பாவை நாட்டிய வைபவம்
டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா மற்றும் திருமலா திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து நடத்திய திருப்பாவை நாட்டிய வைபவம் 20.10.2019 அன்று கன்னியாகுமரியில் இருக்கும் புகழ் பெற்ற TTD தில் நடைபெற்றது. இதில் கேரளா, தமிழகம், ஆந்திரா மாநிலத்தை சார்ந்த 1000 நடன பெண்கள் கலந்து கொண்டார்கள். இன் நிகழ்ச்சியில் திருவாரூர் SVT கனகராஜ், அவர்கள், ஸ்ரீ நாராயனி நிதி லிமிட் செயலாளர் திரு. ஸ்ரீதர் ஐயா தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் நடன பெண்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
விதையில் இருந்து விருட்ச்சம்
Study Foundation சார்பாக, B. V. M. School, ஆரணியில் நடைபெற்ற விதையில் இருந்து விருட்ச்சம் என்ற தலைப்பில் 5 மாவட்டத்தில் 2500 மாணவர்களிடம் 16,000 விதைகளை கொடுத்து day 1 முதல் அதன் மாற்றதையும், வளர்ச்சிகளையும் குறிப்பு எடுக்க வைத்து, செடிகளையும் நன்கு வளர வைத்து அதை அவர்கள் கைகளாளே நடவும் வைத்த ராம் மற்றும் தனபால் அவர்களையும், அவருக்கு துணையாக நின்ற பள்ளிகள் மற்றும் மாணவச் செல்வங்களையும் பாராட்டி Divine World Book of Records சான்றிதழ் வழங்குகிறது. வாழ்த்துக்கள் ராம். தனபால்..
1.10.2019 அன்று உத்திரபிரதேசம் வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்துகொண்டு நாட்டியத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினார்கள். மாணவர்களுக்கு பானராஸ் இசை கல்லுரியின் ஆசிரியர் மணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள். கோவில் நிர்வாக தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கோவில் பிரசாதம் வழங்கினார்கள்.
05.04.2018 அன்று காஞ்சிபுரம், சென்னை. ஏகாம்பரேஷ்வரர் கோவிலில் டிவைன் பைன் ஆர்டஸ் சபா மாணவிகள் விநாயகர், முருகர், தேவி, பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். கலந்து கொண்ட மாணவிகளுக்கு திருகோவிலின் EO அவர்கள், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.
14.10.2018 அன்று சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா மாணவிகள் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இருந்து நடன பள்ளி ஆசிரியர்களும் மாணவிகளும் 300க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்துக் கொண்டு நாட்டியத்தினால் அஞ்சலி செலுத்தினார்கள். திருப்பூர் மாநகராட்சி RI திரு. தங்கவேலு மற்றும் சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் ஐயப்பன் தீட்ச்சதர் அவர்கள் தலைமை ஏற்று விழாவை சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.
3.10.2018 அன்று டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா தில்லை நடராஜர் பாடல்களை எடுத்து பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3000 நடன கலைஞர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த நடனம் ஆடினார்கள். இன் நிகழ்ச்சி Traditional book of records ல் இடம் பெற்று உள்ளது.
17.2.2019 அன்று திருவாரூர் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பும், டிவைன் பைன் ஆர்டஸ் சபாவும் இணைந்து தியாகராஜர் ஆலயத்தில் சிவபுராணம் பாடலுக்கு 30 நிமிடங்கள் நடனம் ஆடினார்கள். இன் நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 2200 நடன கலைஞர்கள் கலந்துகொண்டு சிவபுராண பாடலுக்கு நடனம் ஆடினார்கள். இதில் தமிழகத்தின் உணவு துறை அமைசர் திரு.R. காமராஜர் அவர்களும், தருமபுர 27வது குருமகா சன்னிதானம் அவர்களும், தேச மங்கையர்கரசி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். Treasure Hunt என்ற உலக சாதனை நிகழ்ச்சி புத்தகத்தில் இடம் பெற்றது.