நம் நாட்டின் உயரிய கலாச்சார நுண்கலைகளைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் அவற்றின் தொன்மை நிலை மாறாமல் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் 2016 ம் ஆண்டு டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் தொன்மையான கலைகள் யாவும் காட்சி படங்களையோ (ஓவியம் ) காட்சிப் பொருட்களையோ (சிற்பம்,கட்டிடம் ) சார்ந்த காட்சி கலைகளாக உள்ளன. இதன் வரலாறும் மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. இயல் இசை நாடகம் நடனம் உள்ளிட்ட ஏனைய கலைகளும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும்.
எந்தக் கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் பற்றிய அறிவு, அழகியல் செய்திறன் சமூகப் பயன்பாடு என்பதாக இருக்கும். எனினும் இதுதான் கலை என்றும் இது கலை அல்ல என்றும் சொல்ல முடியாது.
பிற உயிரினங்களில் இருந்து மனிதனைத் தனித்துக் காட்டுவது கலைநுட்பமாகும். உடல் மற்றும் உள்ள திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்கவிப்பது கலையாகும். இக்கலையைக் கற்று அரங்கேற்றல் அல்லது காட்சிப்படுத்தலின் போது பாராட்டுதலுக்காகவும் ரசிப்பதற்காகவும் உள்ளது.
இன்றைய மக்களிடம் மனமாற்றம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. படிப்பு வேலை சம்பளம் ஆகியவற்றைக் கடந்து தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் குறிப்பாக பெண்களிடமும், குழந்தைகளிடமும் மேலோங்கி வளர்ந்து வருகிறது. தன்னம்பிக்கை வளர கல்வி எவ்வளவு அவசியமோ அதேபோல் அவர்களின் தனித் திறமையும் மிகவும் அவசியம் என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. கல்வி கற்பதில் பெண்களுக்கு இன்றளவும் பல சமூக மற்றும் பொருளாதார தடைகள் நிலவி வருகின்றன. பல சமுதாயத்தில் பெண்கள் உயர்கல்வி என்பது வெறுப்புடன் பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களின் தனித்திறமை என்பது அவர்களுக்கு வெற்றிகளைத் தர காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை!
டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா (Divine Fine Arts Sabha) மாணவர்களின் ஆர்வத்தைச் சிறப்பாக பாதுகாத்து அவர்களின் கலை ஆர்வத்தையும் தன்மைகளையும் உயர்த்தவும் வழிவகை செய்து தருகிறது. இந்தியாவின் கலாச்சார நுண்கலைகளைப் போற்றிப் பாதுகாத்து அதை இளைய தலைமுறையிடம் கொண்டு செலுத்துவதில் முக்கிய பங்கு ஆசிரியர்களிடம் தான் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்துவமான கற்பித்தல் முறை உள்ளது. மாணவர்கள் தாங்கள் எந்த அளவில் தன் திறமைகளை வளர்த்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள பாரம்பரியமாக கற்றுக்கொண்ட திறமையான ஆசிரியர்கள் வைத்து பாடத்திடங்களை வடிவம் அமைத்து 8 தர வரிசையின் மூலம் மாணவர்களுக்குப் பாடங்களாக எளிதில் புரியும் படியாக வடிவமைத்துத் தருகிறோம். அவர்களைத் தேர்வு எழுத வைத்து அதன் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட திறமையின் அளவை அவர்களுக்குப் புரிய வைத்து பட்டமளிப்பு விழாவாக வைத்து அவர்களுடைய திறமை களுக்குச் சான்றிதழ் அளிக்கிறோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த நுண்கலைத் துறையில் சிறந்து விளங்குவதற்கான தளத்தை எளிதாக்கிறது.