

திருவாவடுதுறை ஆதீன இசைப்பள்ளி டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா
கலை இலக்கிய மாநாடு – 2025.
சிவபெருமான் புரந்தருளும் சைவ ராஜதானி திருவாவடுதுறை ஆதீனம்..
தமிழ்த்தாய் கொலுவீற்றிருக்கும் அறநிலையம்.
மரபு வாழும் சைவ பீடம், மனதின் ஒளியாய் எழும் மடம்
திருவாவடுதுறை ஆதீனம் உலகப் புகழ் பெற்ற சைவ சித்தாந்தத்தின் 18 சைவ ஆதீனங்களுள் தொன்மையும் தலைமையும் கொண்டது. நூற்றாண்டுகளாகச் சைவசமயம், தமிழ் இலக்கியம், கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது. மேலும், தமிழ் பண்பாட்டின் பாதுகாப்பாளராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறது.
மடாதிபதிகள், காலந்தோறும் சமய பணிகளைத் தொடர்ந்து செய்வதோடு, சமூக நலத்திற்கும் , கல்வி வளர்ச்சிக்கும் உந்துதல் கொடுக்கின்றனர்.
மேலும், ஆதீனம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இலக்கிய மாநாடுகள், மற்றும் கல்வி நிகழ்வுகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. தமிழ் இலக்கியம், இசை, நடனம், மற்றும் பல்வேறு கலை வடிவங்களில் ஆர்வமுள்ள கலைஞர்களையும், அறிஞர்களையும் கௌரவிக்கிறது.
இதன் தொடர்ச்சியாக , திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குரு மகா சந்நிதானம்
ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் நல் ஆசியுடன், இந்த ஆண்டிற்கான கலை, இலக்கிய மாநாடு செப்டம்பர் 28 அன்று பேரூர், கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
கலை இலக்கிய மாநாடு – 2025 பேரூர்,கோவை.
கலை இலக்கிய மாநாடு என்பது கலை மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்வுகளை குறிக்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் அல்லது கருப்பொருளில் நடத்தப்படுகிறது, மேலும் கவிதை, நாடகம், இசை, ஓவியம் போன்ற பல்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கியது. இந்த மாநாடுகள் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூடித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தவும், விவாதங்களில் ஈடுபடவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
முக்கிய நிகழ்வுகள் சில :
1. திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குரு மகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளுரை.
2. தமிழ் மற்றும் கலை சான்றோர்களின் சொற்பொழிவு .
3. டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா வழங்கும் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
4. மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா .
5. 100 – கும் மேற்பட்ட மாணவர்கள் 300 திருக்குறள் பாக்களை பாட உள்ளனர்.
6. நாட்டிய நாடகம் மதுரையை அரசாளும் மீனாட்சி தாயாரின் திருக்கல்யாணம்.
7. கலை நிகழ்ச்சிகள் – தமிழ் அரங்கம்.
8. ஓவியம், கவிதை, பேச்சு போட்டி நிகழ்வுகள்.
9. நன்றி உரை .