
- By: admin
- Comments (0)
- Jan 22
டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபாவின் (Divine Fine Arts Sabha) மார்கழி உற்சவம் திருப்பெருந்துறை என்று அழைக்க படும் ஆவுடையார் கோவிலில் மிக விமர்சையாக 10 நாட்கள் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் 50நடன பள்ளிகளில் இருந்து கலந்துக் கொண்டனர்.


நிகழும் சோபகிருது வருடம் ஆவணி மாதம் 25ம் நாள் 11.09.2023. திங்கள் கிழமை ஈசன மடம் திருநெல்வேலி மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு நடை பெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் திருவாடுதுறை ஆதீனம் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தம் திருக்கரங்களால் டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா ஆசிரியர்களுக்கு அவர்தம் நடன பணியை பாராட்டி நாட்டிய மயூரி என்னும் விருது வழங்கியருளியது. அதே போல் நடனம் ஆடிய கலைஞர்களுக்கு நாட்டிய மணி என்ற விருது வழங்கி ஆசீர்வாதமும் தன் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

ஆடி பெருக்கு முன்னிட்டு டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபாவும், அவிநாசி ஸ்ரீ சாய் பாபா கோவிலும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.


தருமை ஆதீனம் 27 வது குருமணிகளின் சமுதாயத் தொண்டும், சமயத் தொண்டும், சிறப்பாக செய்து வருவதையும். அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனை செய்து வருவதையும் . அவருடைய சாதனைகளை பாராட்டும் வகையில் Divine World Book of Records நிறுவனம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது .