- By: admin
- Comments (0)
- Sep 1
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான ஆவுடையார் கோவில் என வழங்கப்பெறும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் சிவராத்திரியை முன்னிட்டு 10 மார்ச் 2024 அன்று மாலை 4 மணிக்கு டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா வழங்கும் “சிவபுராண பெருவிழா” நடைபெற்றது.
இன் நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும், இசை கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
சிவபுராணம் பெருவிழாவின் ஆரம்பமாக முதலில் அனைத்து நடன ஆசிரியர்கள் நடன கலைஞர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒருமுறை சிவபுராண பாடலை இசை கலைஞர்கள் என அனைவரும் சேர்ந்து பாடினார்கள்.
பின் அதே பாடலுக்கு நடன கலைஞர்கள் நடன ம் ஆடினார்கள்.
நிகழ்வின் இறுதியில் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.




Add Your Heading Text Here
